முக்கிய செய்திகள்

நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும்; அரியநேத்திரன்

257

மட்டக்களப்பில் இனப்படுகொலை நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 11 வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல இக்கட்டான காலத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இவ்வருடம் நீதிமன்றத் தடை உத்தரவு மூலம் பொது இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், மக்கள் அனைவரும் மே 18ஆம் திகதி தங்கள் வீடுகளில் கட்டாயம் விளக்கேற்றி நினைவேந்தலை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *