முக்கிய செய்திகள்

நியூ பிரவுன்ஸ்விக் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகளின் குடும்பத்தினரை கனேடிய பிரதமர் நேரில் சென்று சந்தித்துள்ளார்

450

நியூ பிரவுன்ஸ்விக் தலைநகர் ஃபிரெட்றிக்சன்(Fredericton) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களது குடும்பத்தினரை பிரதமர் ஜஸ்டின் ரூடே இன்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின்போது, இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்த்ககது.

இவ்வாறான நிலையில் அங்குள்ள காவல்நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவகத்தில் மலர்தூவி தனது மரியாதையைச் செலுத்தியுள்ள பிரதமர், உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தாரையும் இன்று தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார்.

இதன்போது அவர்களது துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், அவர்களது இழப்பின் சோகங்களைப் பகிர்ந்து கொண்டதாகவும், சமூகத்தையும் நாட்டையும் பாதுகாப்பதற்கான கடப்பாட்டில் அந்த இரண்டு அதிகாரிகளும் எவ்வளவு உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதனை அவர்களுக்கு எடுத்துரைத்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த கடினமான காலத்தில், இந்த முழுச் சமூகமும், முழு நாடும் அவர்களுக்கு துணை நிற்பதனை அவர்களுக்க எடுத்துக் கூறியதுடன், உயிர்நீத்த அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததாகவும் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *