மட்டக்களப்பு மாநகரசபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம், இரண்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் சிறப்பு அமர்வு இன்று காலை, மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கிய மாநகரசபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை மாநகர முதல்வர் முன்வைத்து, ஆதரவு கோரினார்.
வரவுசெலவுத் திட்டம், திறந்த வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் தலா இரண்டு உறுப்பினர்களும், என 20 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் இரண்டு உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும், ஈ.பி.டி.பியின் ஒரு உறுப்பினரும், சுயேட்சை குழுக்களின் மூன்று உறுப்பினர்களுமாக, 18 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.
இதையடுத்து, இரண்டு மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.