முக்கிய செய்திகள்

நிறைவை நோக்கி உணர்வெழுச்சிப்பேரணி

128

பொத்துவில் முதல் முதல் பொலிகண்டி வரையிலான உரிமைக்கான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் நாளை ஆகும்.

இந்நிலையில் நாளை காலையில் கிளநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இறுதி இலக்கான பொலிகண்டியை நோக்கி பேரணி ஆரம்பமாகவுள்ளது.  சமய வழிபாடுகளுடன் இந்தப்பேரணி ஆரம்பமாகவுள்ளது.

பேரணி நகருவதற்கு முன்னதாக கிளிநெச்சியில் தொடர்ச்சியாக போராடிவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ள உறவுகளுடன் இணைந்து கண்டனப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளது.

அதன்பின்னர்  கிளிநொச்சி நோக்கி நகரும் பேரணியானது நகரின் மையத்தினை  அடைந்து அங்கு கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்ந்து மீண்டும் ஏ9வீதிவழியாக யாழ்ப்பாணத்தினை நோக்கி நகரும் பேரணியானது பளையிலும், கொடிகாமத்திலும், சாவச்சேரியிலும், கைதடியிலும், பின்னர் யாழ்.நகரினுள்ளும், கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தவுள்ளது.

அத்துடன் நல்லூரியில் விசேட கூட்டத்தினை நடத்துவதற்கான ஏற்பாடும் மேற்கொள்ளப்படவதாக உத்தியோக பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத்தொடர்ந்து அங்கிருந்து பருத்தித்துறை வழியாக நகரவுள்ள பேரணியானது அச்சுவேலியில் அடைந்ததும் அங்கும் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டதன் பின்னராக நெல்லியடியை அடையவுள்ளது.

நெல்லியடியிலிருந்து பொலிகண்டி நோக்கி பேரணி செல்லவுள்ளது. இதன்போது அனைத்து தரப்பினரும் பங்கேற்று தமது ஆதரவினை தெரிவுக்குமாறு அரசியல் கட்சித்தலைவர்கள், மதத்தலைவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரால் பகிரங்ககோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *