முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நெடுஞ்சாலை 400இல் ஏற்பட்ட பாரிய விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

2168

நேற்று இரவு நெடுஞ்சாலை 400 பகுதியில், தீப்பிளம்புகள் மற்றும் வெடிப்புகளுடன் ஏற்பட்ட பயங்கரமான வீதி விபத்தில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுங்சாலை 400இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தில், Barrieக்கு தெற்கே, நெடுஞ்சாலை 88இன் வடபகுதியில், நேற்று இரவு 10.30 அளவில் இந்த விபத்து சம்பவித்து்ளளது.

குறைந்தது 14 வாகனங்கள் இந்த விபத்தில் தொடர்பு பட்டுள்ளதாகவும், விபத்தினை அடுத்து அந்த பகுதி ஊடானா போக்குவரத்துகள் ஸ்தாம்பித்து போனதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு எரிபொருள் தாங்கி கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல சரக்கு ஊர்திகள் இந்த விபத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், பாரிய வெடிப்புகள் மற்றும் தீச் சுவாலைகளுடன் காண்பபட்ட அந்த பகுதியில், பல வாகனங்கள் முற்றாக தீக்கிரையாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வாகனங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த சரக்கு ஊர்தி ஒன்றின் மீது பிறிதொரு கனரக வாகனம் மோதியதாகவும், அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக பல வாகனங்கள் மோதுண்டதாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோதலை அடுத்து கனரக வாகனங்கள் கவிழ்து வீழ்ந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பாரிய சத்தத்துடன தீப்பிழம்பு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்து பல வெடிப்புச் சத்தங்களைக் கேட்டதாகவும் அவர் சம்பவம் தொடர்பில் விபரித்துள்ளார்.

அத்துடன் இந்த விபத்தின் போது சிக்குண்ட இரண்டு எரிபொருள் தாங்கி வாகனங்களும் தீப்பற்றி எரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டமை காரணமாக, சரியாக எத்தனை வானங்கள் மற்றும் எத்தனை பேர் இதற்குள் சிக்கியிருக்கக் கூடும் என்பது குறித்தோர், எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்தோ அதிகாரிகளால் உடனடியாக தகவல்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தினை அடுத்து நெடுஞ்சாலை 400இல், நெடுஞ்சாலை 88ற்கும் நெடுங்சாலை 89ற்கும் இடைப்பட்ட பகுதி ஊடான இரு திசை நோக்கிய போக்குவரத்துகளும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் ஏற்பட்ட சரியான இழப்பு விபரங்கள் கிடைப்பதற்கு சில நாட்கள் ஆகக்கூடும் எனவும், நெடுஞ்சாலையும சேதமடைந்துள்ளதனால், அதனூடான போக்குவரத்துகள் மீள ஆரம்பிப்ப்தற்கும் சில நாட்கள் ஆகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *