நேபாள நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 7 பேர் பலி

645

நேபாள நாட்டின் சித்வான் மாவட்டத்தில் இன்று மதியம் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தும், எதிரே பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பேர் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த 17 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *