முக்கிய செய்திகள்

நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

429

இன்று அதிகாலை வேளையில் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Yonge Street மற்றும் Finch Avenue பகுதியில், இன்று அதிகாலை 12.45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனம் ஒன்று வீதியோர கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாகவும், அந்த வாகனத்தைச் செலுத்திச் சென்ற சுமார் 20 வயது மதிக்கத்தக்க சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வாகனத்தில் சாரதி ஒருவர் மட்டுமே இருந்ததாகவும், இந்த விபத்துக்கு மது போதை காரணம் என்று தோன்றவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விபத்தினை அடுத்து அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *