மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் சுமார் 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
Tillabéri பிராந்தியத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் கிளர்ச்சியாளர்களினால் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாலி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், துப்பாக்கிதாரிகளினால் பொதுமக்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் எரியூட்டப்பட்டதுடன் மேலும் இரண்டு வாகனங்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன
எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.