நைஜீரியாவில் ஆயுதம் தாங்கிய நபர்களால் ஆரம்ப பாடசாலை ஒன்றின் மாணவர்களும், ஆசிரியர்களும் இன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கில் உள்ள கடுனா (Kaduna) மாகாணத்தில் சுமார் 30 கல்லூரி மாணவர்கள் ஆயுதக் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு ஒரு வாரம் கழித்து இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்றுக்காலை கிராமம் ஒன்றின் ஆரம்ப பாடசாலைக்கு சென்றிருந்த மாணவர்களே ஆசிரியர்களுடன் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்கள்.
இந்தச் சம்பவத்தில் 3 ஆசிரியர்கள் கடத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை எத்தனை மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.