முக்கிய செய்திகள்

நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்

303

நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் ஐந்து பேர் கடத்தப்பட்டுள்ளமையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்திடம்  அறிக்கை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் உடனடியாக ஈடுபட இந்திய தூதர் அபய் தாக்கூருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

T.M apecus என்ற இந்திய கப்பலை நைஜீரிய கடற்கொள்ளையர்கள் கடந்தமாதம் கடத்தியிருந்தனர்.

இது குறித்து கப்பலில் பணியாற்றிய மாலுமியின் மனைவியான பாக்யஸ்ரீ தாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜுயிடம் தன் கணவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *