கிருமிகள் எல்லாமே நமக்கு கெடுதலை விளைவிப்பதில்லை. நல்ல கிருமிகளும் பல உண்டு. உணவை செரித்து, சத்துக்களை பிரித்தெடுக்க, நமது வயிற்றில் உள்ள பல நல்ல கிருமிகள் உதவுகின்றன. அவை இல்லாவிட்டால் நமக்கு உணவு செரிக்காது.
அதேபோலத் தான், மூக்கிலும், தொண்டையிலும் சில நல்ல பாக்டீரியா இருந்தால் ப்ளூ வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மால் தப்பிக்க முடியும்
என்பதை, அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.ப்ளூ வைரஸ் தாக்கியவர்கள், அதிலிருந்து தப்பியவர்கள் ஆகியோரின் மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சேமிக்கப்பட்ட பாக்டீரியாக்களை மிச்சிகன் விஞ்ஞானிகள் வகைப்படுத்தி ஆராய்ந்த போது, குறிப்பிட்ட சில வகை பாக்டீரியாக்கள் உள்ளவர்களுக்கு ப்ளூ வைரஸ் தாக்குதல் ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.இந்த கண்டுபிடிப்பு, ப்ளூ வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உதவும் என்பதோடு, மனித உடலில் நல்ல கிருமிகள் ஆற்றும் பங்கைப் பற்றியும் நமக்கு புரிதலை தரும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.


Previous Postபெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்குமாறு கோரிய கவனயீர்புப் போரட்டம்
Next Postபாடசாலைகளில் ‘காபன் மொனொக்சைட் உணர்கருவி’களை பொருத்த நடவடிக்கை!