கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, அந்தப் பகுதிகளில் குவிக்கப்பட்ட படைகளை விலக்க இந்தியாவும் சீனாவும் இணங்கியுள்ளன.
மோதல்களை அடுத்து, லடாக் எல்லையில் இரு நாட்டு இராணுவமும் தலா 50 ஆயிரம் வீரர்களை குவித்து வைத்துள்ளன.
இந்த நிலையில், இருநாட்டு இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையில், நடந்த 16 மணிநேர பேச்சுக்களை அடுத்து, லடாக்கில் இந்திய-சீன எல்லையில் உள்ள பாங்காங் ஏரிக்கரையில் இருந்து இருநாட்டு படைகளையும் விலக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
பாங்காங் ஏரியின் தென்கரையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ டாங்குகளும் திரும்பப் பெறப்படுவதாக கூறப்படுகிறது.