பண்டார வன்னியன் முல்லைத்தீவு கோட்டையை வெற்றி கொண்ட நாள் இன்று நினைவுகூரப்பட்டுள்ளது

879

வன்னியின் தலை சிறந்த மன்னனான பண்டார வன்னியன் முல்லைத்தீவு கோட்டையை வெற்றி கொண்ட இன்றைய இந்த நாளை நினைவுகூரும் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

1803ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் நாளை பண்டார வன்னியன் நினைவு நாளாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர்.

அந்த வகையில் முல்லைத்தீவு கோட்டையை பண்டார வன்னியன் கைப்பற்றிய 215ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, இன்று பண்டார வன்னயனின் உருச் சிலைக்கு மலர்மாணி அணிவித்து நினைவுகூரல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் படைத்தளமொன்றை அமைத்திருந்த வேளையில், அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி இடம்பெற்று வந்தது.

வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அந்தப் படைத்தளத்தை நிர்மூலமாக்கியதுடன், அங்கிருந்த இரண்டு பீரங்கிகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன.

1803 ஆகஸ்ட் 25ஆம் நாள் அன்று, முல்லைத்தீவு படைத்தளம் அவ்வாறு வெற்றிகொள்ளப்பட் பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளாக இன்றைய நாள் நினைவுகூரப்படுகிறது.

பண்டார வன்னியன் கொலைசெய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுடன், பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, அவர் இறந்த நாள் ஒக்டோபர் 31 என்று கணக்கிடுகிடப்படுகின்றது.

எனினும் 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *