முக்கிய செய்திகள்

பதவிவிலகிய ஆளுநரை அடியொற்றிய அறக்கட்டளை தொடர்பில் சர்ச்சை

19

ஆளுநர் பதவியிலிருந்து விலகிய ஜூலி பேயட்டின்  (Julie Payette)  பின்னணியில் இயங்கிய அறக்கட்டையொன்றுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் 30மில்லியன் டொலர்கள் நிதி அந்த அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிதிஒதுக்கீடு தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் வெளிப்படைத்தன்மையுடனான கணக்கு விபரங்கள் தேவைப்படுவதாக அரசாங்கத்தினை விமர்சனம் செய்யும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதுபற்றிய விபரங்களை தயார் செய்யும் செயற்பாடுகளில் அவர்கள் இறங்கியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயம் பற்றி இதுவரையில் பிரதமர் அலுவலகம் எவ்விதமான பிரதிபலிப்பையும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *