முக்கிய செய்திகள்

பதவி விலகினார் கனடிய ஆளுநர் ஜெனரல்

147

கனடிய ஆளுநர் ஜெனரல் ஜூலி பேயட் (Julie Payette) உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகியுள்ளார்.

பணியிட துன்புறுத்தல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து அவர் பதவி விலகும் முடிவினை தீர்க்கமாக எடுத்து அறிவித்துள்ளார்.

‘எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான பணிச்சூழலுக்கு அனைவருக்கும் உரிமை உண்டு.

ஆளுநர்  ஜெனரலின் செயலாளர் அலுவலகத்தில் இது எப்போதுமே இல்லை என்று தோன்றுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக ரைடோ ஹாலில் பதட்டங்கள் எழுந்துள்ளனஇ அதற்காக நான் வருந்துகிறேன்.’

எனக்கு எதிரான பணியிட துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு சுயாதீன ஆய்வு முடிந்துவிட்டதன் பின்னரே நான் எனது முடிவினை எடுத்துள்ளேன். அனைவரும் மன்னித்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *