முக்கிய செய்திகள்

பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் JAN- 27

1254

பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள் (International Holocaust Remembrance Day) என்பது பெரும் இன அழிப்பினால் உயிரிழந்தவர்களுக்காக 27 சனவரி நினைவு கொள்ளப்படும் பன்னாட்டுநினைவு நாள் ஆகும். இப்பெரும் இன அழிப்பினால் நாட்சிப் படைகளினாலும் அதன் கூட்டாளிகளினாலும் 6 மில்லியன் யூதர்கள், 2 மில்லியன் நாடோடி இன மக்கள் (உரோமா மற்றும் சின்டி), 15,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் மில்லியன் கணக்கான ஏனையவர்கள் இனப்படுகொலையால் அழிக்கப்பட்டனர். இந்நாள், 42வது கூட்ட அமர்வின்போது 1 நவம்பர் 2005 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் 60/7 னால் உருவாக்கப்பட்டது.[1] நாசி அரசியல் கைதிகளின் முகாம்கள் விடுதலை மற்றும் பெரும் இன அழிப்பு நிறுத்தப்பட்ட 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்காக 24 சனவரி 2005 அன்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைகளின் சிறப்பு அமர்வின் பின் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.[2]

27 சனவரி 1945 அன்று பெரும் நாட்சி மரண முகாமான அவுஷ்விட்ஸ் வதை முகாம் சோவியத் படைகளினால் விடுவிக்கப்பட்டது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *