பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரிப்பு

50

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள துணை முதல்வர் பன்னீர்செல்வம், வேட்புமனுவில் தனது சொத்து மதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது இருந்ததை விட தற்போது, அவரது அசையும் சொத்து 843 சதவீதமும், அசையா சொத்து 169 சதவீதம் அதிகரித்துள்ளது.

2016ல் 55 இலட்சம் ரூபாவாக இருந்த பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து, தற்போது 5 கோடி 19 இலட்சம் ரூபாவாகவும், 2016ல் 98 இலட்சமாக இருந்த அசையா சொத்தின் மதிப்பு இப்போது 2 கோடி 64 இலட்சம் ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

அதேவேளை, முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபா வரை குறைந்துள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமிக்கு 2016 இல் 3 கோடி 14 இலட்சம் ரூபாவாக இருந்த அசையும் சொத்து, இப்போது, 2 கோடி ரூபாவாக குறைந்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *