பப்பூவா நியுகினியா நாட்டின் பயணிகள் வானூர்தி ஒன்று பசுபிக் கடலில் விழுந்த
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் பசுபிக் கடற்பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறிய நாடான மைக்ரோனேஷியாவின் Chuuk அனைத்துலகத் துறைமுகத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி அது கடலில் வீழ்ந்துள்ளது.
எனினும் கடலில் வீழ்ந்த விமானத்திலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 47 பேரும் படகுகள் மூலமாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று வௌ்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக விமான நிலையத்தின் முகாமையாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை விசாரணையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றிருப்பதாகவும், அவர்கள் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்வர் என்று பப்புவா நியுகினியாவின் விபத்து விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.