பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் எண்ணம் இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

305

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் எண்ணமோ, நல்லிணக்கத்தை நடைமுறையில் உருவாக்கும் எண்ணமோ இலங்கை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி, சமாதான ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மதனராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்ட த்தினை நீக்குவதாக இலங்கை அரசாங்கம் அனைத்துலகத்திற்கு வாக்குறுதியளித்த போதிலும், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும், பயங்கரவாத தடைச்ச ட்டத்திற்க்கு மாற்றாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு நிகரானது என்பதால் அதனை நாம் ஏற்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சுமார் 110 வரையான தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுளள அவர், இந்த அரசாங்கம் உண்மையில் நல்லிணக்கத்தை கொண்டுவருவதற்கு விரும்பும் ஒரு அரசாங்கமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் 210 வரையான அரசியல் கைதிகள் சிறையில் இருந்த நிலையில், அவர்களில் ஒரு தொகுதியினர் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களை நல்லிணக்கத்தின் அடிப்படையில் இந்த அரசாங்கம் விடுவிக்கவில்லை எனவும், மாறாக அவர்களிடம் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்ற அடிப்படையில் சட்டரீதியாகவே அவர்கள் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டார்கள் எனவும் அவர் விபரித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *