முக்கிய செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி, யாழ்ப்பாண மக்கள் போராட்டம்

304

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்த்து வடதமிழீழ கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் இணைந்து கிளிநொச்சியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டில் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கண்டித்து, மனித உரிமை செயற்பாட்டு இயக்கங்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிளிநாச்சி பழைய மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக ஏ9 வீதி டிப்போச் சந்திவரை சென்று அங்கு கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் பாதகமான விடயங்கள் தொடர்பில் மக்களை தெளிவு படுத்தம் வகையில் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் கோசமிட்டனர்.

“நாட்டில் போர் நிறைவடைந்துள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்த நிலையில் புதிய சட்டம் ஒன்றை இயற்றி நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. சர்வதேசத்தை கண்துடைப்பதற்காக குறித்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திலும் மோசமான பாதிக்க கூடிய சரத்துக்கள் உள்ளன. எனவே எமக்கு இந்தச் சட்டம் வேண்டாம். சட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் எமது உறவுகள் தொடர்ந்தும் அரசியல் கைதிகளாக சிறையில் உள்ளனர். எனவே பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திலும் தொடர்ந்தும் அவர்கள் சிறையில் வாட வழிவகுக்கும். எனவே இந்த சட்டத்தை முழுமையாக அகற்ற வேண்டும்“ என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *