முக்கிய செய்திகள்

பருவநிலை மாற்றம் குறித்து ஆராய பழங்காலத்து பனிகட்டி தேடுதல்: விஞ்ஞானிகள் புது முயற்சி

576

அண்டார்டிகாவில் மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு கடுமையான பனி நிறைந்த பிரதேசமாகும். இங்கு சர்வதேச அளவில் ஆராய்ச்சியாளர்கள் மட்டும் முகாம் அமைத்து தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.இந்நிலையில்  உலகின் பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கால நிலை மாற்றங்களின் ரகசியங்களை அறிய  பனி பாலைவனமாக திகழக்கூடிய அண்டார்டிகாவில்  மிக பழமையான பனிகட்டிகளை  கண்டுபிடித்து ஆய்வு  செய்ய தேவையான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள பரந்து விரிந்த அண்டார்டிகாவில்  குறிப்பிட்ட அளவிலான பகுதியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் மேற்பரப்பிலிருந்து ஊடுருவி செல்லும்  நவீன ரேடார் கருவி மூலம் பனிகட்டிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. 2.7 கிமீ அளவில்  துளையிட திட்டமிட்டு  பணிகள் செயல்படுத்தப்படுகிறது.இந்த ஆய்வில் 15 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய பனி கட்டிகளை கண்டெடுக்கும் நோக்கத்தோடு ஆராய்ச்சியாளர்கள் குழு களமிறங்கி பணியாற்றுகிறது. இந்த ஆராய்ச்சி மூலம் பழங்கால கால நிலைகள் குறித்த ரகசியங்கள் மற்றும் முக்கிய தகவல்களை பெற முடியும் என ஆராய்ச்சியளர்கள் நம்புகின்றனர். உலக அளவில் பனிப்பிரதேசங்களில் மிக வேகமாக பனிக்கட்டிகள் உருகி வருவதால், அதை காப்பாற்ற வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இதுபோன்ற ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *