முக்கிய செய்திகள்

பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

321

பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவில் இலங்கை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவின் 117 ஆவது அமர்வு சரஜீவோ, பொஸ்னியா – ஹெர்சகோவினாவில், கடந்த 11 – 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.

இந்த அமர்வில் 37 நாடுகளின், 760 காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது அதிலும் கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற 51 காணாமற் போன சம்பவங்கள் தொடர்பாக அவசர நடைமுறையின் கீழ் ஐ.நா.பணிக்குழு ஆய்வு செய்தது.

அதில் பங்களாதேஷ், எகிப்து, பாக்கிஸ்தான், ருவாண்டா, சவூதி அரேபியா, சூடான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் அடங்குகின்றன.

அவசர நடைமுறைக்கு முன்னதாக புதிதாக பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் மற்றும் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட 758 வழக்குகளையும் இக் குழு பரிசோதித்தது.

இந்த அமர்வின் போது ஆய்வுசெய்யப்பட்ட பிற 37 நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது.

இதன் போது பெற்றுக்கொண்ட ஆய்வு பற்றி விவாதித்து, எதிர்வரும் 118 ஆவது அமர்வில் அறிவிக்கப்படும் என ஐ.நா. பணிக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவின் 118 ஆவது அமர்வு எதிர்வரும் மே மாதம் 13 முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *