முக்கிய செய்திகள்

பலாலி அனைத்துலக வானூர்தி நிலையத்தை புனரமைக்க உடன்பாடு

170

பலாலி அனைத்துலக வானூர்தி நிலையத்தை புனரமைப்பது குறித்து, இந்தியாவுடன் புதிய உடன்பாடு ஒன்றை செய்து கொள்ளவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின்  போதே, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இரத்மலான வானூர்தி நிலையத்தை புனரமைக்கவும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு வானூர்தி நிலையங்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த காலத்தில் அவசர அவசரமாக யாழ்ப்பாணம் வானூர்தி நிலையம் திறக்கப்பட்ட போதும், அதற்கான அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.

சில செயற்பாடுகளில் மாற்றங்கள் செய்ய இந்தியா விரும்புகின்றது.

எனவே, பலாலி வானூர்தி நிலைய அபிவிருத்தி தொடர்பாக, புதிய உடன்பாடு ஒன்றினை செய்து கொள்வது குறித்து, இந்திய தூதுவருடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *