முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்காக இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

954

பல்கலைக்கழக அனுமதிக்காக இன்றைய தினம் முதல் விண்ணப்பம் செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக அனுமதி தொடர்பிலான விசேட கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை புத்தகக் கடைகளில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி உரிய தகுதிகளை பெற்றுக் கொண்ட பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20ம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தின் ஊடாகவும் விண்ணப்பம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *