இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து மேலும் பல அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்.
அத்துடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக, கீச்சகப் பதிவில், குறிப்பிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கோவாக்சின் என்ற தடுப்பூசியையே செலுத்திக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.