முக்கிய செய்திகள்

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

569

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

66 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

அத்துடன் 4 மாகாண தேர்தலின் முடிவுகளையும் அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், பஞ்சாப் மாகாணத்தில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும், சிந்து மாகாணத்தில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், பலோசிஸ்தான் மாகாணத்தில் அவாமி கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் 272 தொகுதிகளுக்கும், 4 மாகாணங்களுக்கும் கடந்த 25ஆம் நாள் தேர்தல் நடைபெற்ற போதிலும், நீண்ட தாமதத்தின் பின்னர் தற்போதே உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *