முக்கிய செய்திகள்

பாகிஸ்தான், இந்தியா இடையே பேச்சுவார்த்தை

32

சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து  பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான பேச்சுவார்த்தை எதிர்வரும் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் – இந்தியா இடையே பாயும் நதிகளின் நீரைப் பகிர்ந்து கொள்வது குறித்து  1960இல்  சிந்து நதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி மேற்கு பகுதியில் உள்ள சட்லஜ், பியாஸ், ரவி நதிகளில் பாயும் நீரை இந்தியா முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்.

மேற்கு பகுதியில் பாயும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் பெரும் பகுதியை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா மேற்கு பகுதியில் பாயும் நதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் நீர் மின் நிலையங்களை அமைத்து கொள்ளலாம்.

சிந்து நதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீரைப் பகிர்ந்து கொள்வது நீர் மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக இரு நாட்டிலும் சிந்து நதி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *