முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று சனாதிபதி மாளிகையில் நடைபெற்றுள்ளது

415

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று சனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

16 அமைச்சர்கள் மற்றும் பிரதமருக்கான 5 ஆலோசகர்கள் என 21 புதிய அமைச்சர்களுக்கு இம்ரான் கான் முன்னிலையில் சனாதிபதி மம்னூன் உசைன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தற்போது பதவியேற்றுள்ள அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் முஷாரப் ஆட்சிக்காலத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் உமர், நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகளை உடனே சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க நீண்டகால நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறே பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள கட்டாக், நாட்டில் அமைதியை ஏற்படுத்த இரவு பகலாக பாடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *