பாக்.இராணுவத்திற்கு கண்டம் தெரிவித்து பங்களாதேசில் பேரணி

43

பங்களாதேசில் 39 ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தான் இராணுவம் நடத்திய இனப்படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து டாக்கா நகரில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

பங்களாதேசில், கடந்த 1971ம் ஆண்டு மார்ச் 25 ஆம் திகதி நள்ளிரவில் ஒப்பரேசன் சேர்ச்லைட் (operation search light) என்ற பெயரில் 1 இலட்சம் பேரை கொன்று குவித்தது. 

ஒரே இரவில் நடந்த இந்த படுகொலையில் பங்களாதேஷ்  கல்வியாளர்கள், பண்டிதர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அறிவுசார் வித்தகர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், டாக்காவில் இன்று 120க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் பேரணியாக சென்றனர். 

பேரணியில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தானுடனான உறவை மன்னிப்பு கேட்கும்வரை துண்டியுங்கள்  என்ற வாசகம் அடங்கிய பதாதைகளுடன் சென்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *