முக்கிய செய்திகள்

பாடசாலையில் 8 வயது சிறுமியை கடத்துவதற்கு முயற்சி

52

ரொறன்ரோ Etobicoke இல் உள்ள பாடசாலை ஒன்றில் எட்டு வயது சிறுமி ஒருவரைக் கடத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Thistle Down Boulevard, பகுதியில் உள்ள St. John Vianney கத்தோலிக்க பாடசாலையில் நேற்று பிற்பகல் 12.30 மணியளவில், சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களை அணுகிய ஆண் ஒருவர் மாணவி ஒருவரை தனது தோளில் தூக்கிக் கொண்டு செல்ல முயன்றுள்ளார்.

இதனை ஏனைய மாணவர்கள் அவதானித்ததை அடுத்து, 20 வயதுடைய குறித்த இளைஞன், சிறுமியை தரையில் போட்டு விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து காவல்துறை அவசர பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்தக் கடத்தல் முயற்சியின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *