பாண்டியனின் பூதவுடல் மதுரையில் நல்லடக்கம்

54

மறைந்த மூத்த அரசியல் தலைவர் பாண்டியனின் பூதவுடல் மதுரையில் உள்ள அவரது சொந்த ஊரான வெள்ளைமலைப்பட்டியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக, கடந்த 24ஆம் திகதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் உள்ள இல்லத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலும், வைக்கப்பட்ட அவரது பூதஉடலுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், அமைச்சர் ஜெயக்குமார், உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பாண்டியனின் மறைவை அடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு அவரது பூதவுடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உசிலம்பட்டி அருகேயுள்ள கீழ் வெள்ளைமலைப்பட்டியில் பிற்பகல் 2 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *