முக்கிய செய்திகள்

பாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது

12

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் மகிழுந்து ஒன்றில் பயணித்த நிலையில், கைதான 4 இளைஞர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் இன்றைய தினம் பாணந்துறை பதில் நீதவான் ஜயன்தி டி சில்வா முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கைதானவர்கள் 18 முதல் 20 வயதுகளுக்கு இடைப்பட்ட அக்குறணை பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், நீல நிற மகிழுந்தின் கதவுகளில் அமர்ந்தவாறு பாதுகாப்பற்ற முறையில் இளைஞர்கள் சிலர் பயணித்துள்ள காணொளி அண்மையில் சமூகவலைதளங்களில் பரவியது.

இதற்கமைய, நேற்று மாலை குறித்த மகிழுந்து காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதனை செலுத்திய 20 வயது இளைஞன் அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த சந்தேகநபரை, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஏனைய நான்கு பேரும் இன்றைய தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *