முக்கிய செய்திகள்

பாப்பரசர் பிரான்சிஸ் இன்று ஈராக்கிற்கு பயணம்

41

பாப்பரசர் பிரான்சிஸ் இன்று ஈராக்கிற்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தை மேற்கொள்கிறார்.

கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த பின்னர், பாப்பரசர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

ஈராக்கில் குறைந்து வரும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கு நம்பிக்கை அளிக்கும் நோக்கிலும், மதங்களுக்கு இடையிலான உரையாடலை வளர்க்கும் நோக்கிலும் பாப்பரசர், இந்த நான்கு நாள் பயணத்தை மேற்கொள்கிறார்.

ஈராக்கின் மிகப்பெரிய கிறிஸ்தவ நகரமான பாக்தாத், மொசூல் போன்ற இடங்களிலுள்ள மக்களையும் சந்திக்கவுள்ள பாப்பரசர், ஈராக்கின் மதிப்பிற்குரிய ஷியா முஸ்லிம் மதகுருவையும் சந்திக்கவுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *