முக்கிய செய்திகள்

பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

24

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தடைவிதித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுமாறு, இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்துக்கு, ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட பாம் எண்ணெயை சந்தையில் விற்பனைக்கு விடக் கூடாது என்றும், ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஏற்கனவே இலங்கையில் எண்ணெய் பனை எனப்படும், பாம் மரங்களை பயிரிடுவதற்கு தடைவிதித்துள்ளார்.

இலங்கையில் பாம் எண்ணெய் பயன்பாட்டை முற்றாக நீக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இறக்குமதி செய்யப்படும் பாம் எண்ணெயை துறைமுகங்களில் இருந்து வெளியேற்றுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று, சுங்கப் பணிப்பாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *