முக்கிய செய்திகள்

பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

28

பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பிரதமர் மோடி தனது கீச்சகப் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்தும், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அவரது பிறந்தநாளை அ.தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், “பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரது இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு எனது புகழ் வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர் அவர்கள் திரையுலகிலும், அரசியலிலும் பரவலாக மதிக்கப்பட்டார். அவர் முதலமைச்சராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளைத் தொடங்கினார் என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *