முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பார்முலா1 கார்பந்தயம் – ஹாமில்டன் முதலிடம்

835

பார்முலா1 கார்பந்தயத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11-வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி அங்குள்ள ஹாக்கென்ஹீம் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.458 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் 14-வது வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 32 நிமிடம் 29.845 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன், அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச்சென்றார்.

இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். அவரை விட 4.5 வினாடி பின்தங்கிய பின்லாந்தின் வால்டெரி போட்டாஸ் 2-வது இடம் பெற்றார். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட உள்ளூர் வீரர் செபாஸ்டியன் வெட்டலின் கார் துரதிர்ஷ்டவசமாக 55-வது சுற்றின் போது விபத்துக்குள்ளாகி பாதியில் வெளியேற நேரிட்டது. போர்ஸ் இந்தியா அணிக்காக பங்கேற்றுள்ள செர்ஜியோ பெரேஸ் (மெக்சிகோ), ஈஸ்ட்பான் ஒகான் (பிரான்ஸ்) முறையே 7, 8-வது இடங்களை பிடித்தனர்.

11 சுற்று முடிவில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 188 புள்ளிகளுடன் முதலிடத்திலும், செபாஸ்டியன் வெட்டல் 171 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர். 12-வது சுற்று போட்டி வருகிற 29-ந்தேதி ஹங்கேரியில் நடக்கிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *