பிக்கறிங் பகுதியில் இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

358

பிக்கறிங் பகுதியில் இன்று காலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Brock Road மற்றும் Bayly Street பகுதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் இன்று அதிகாலை 2.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை Durham பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் உயிராபத்தான நிலையிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும், இன்று காலையில் அவருக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் காவல்துறையினர், சம்பவத்தை நேரில் பார்த்தோர் அல்லது அது தொடர்பில் தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், சந்தேக நபர்கள் குறித்த விபரங்களும் வெளியிடப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *