பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் வாசஸ்தலத்தினுள் ஆயுதங்களுடன் பிரவேசிப்பதற்கு முயன்ற நபருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மனிடோபாவைச் சேர்ந்த இந்த நபர் பிரதமர் ரூடோவிற்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஆயுதங்களுடன் வாசஸ்தலத்தினுள் பிரவேசிக்க முயன்றபோது காவல்துறை அதிகாரிகளால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் குறித்த வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.