இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ள பாகிஸ்தான் எதிர்கால பிரதமர் இம்ரான் கானுடன் இந்தியப் பிரதமர் மோடி நட்பு பாராட்ட வேண்டும் என்று காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.
இம்ரான் கான் தனது தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவுடனான பிணக்குகளையும், காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண விரும்புவதாக தெரிவிவித்துள்ளார்.
இந்த நிலையில் காஷ்மீரின் சிறிநகரில் இன்று நடைபெற்ற மக்கள்சனநாயக கட்சியின் 19-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற காஷ்மீர் மாநில முதல்வர் மெகபூபா முப்தி,இம்ரான் கானுடன் இந்தியப் பிரதமர் மோடி நட்பு பாராட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரம் எப்போதுமே இந்தியப் பிரதமர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது என்றும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நட்புக்கரம் நீட்டியதுடன், எல்லைப்பகுதியில் போர்நிறுத்தத்தையும் ஏற்படுத்தினார் எனவும் மெகபூபா முப்தி விபரித்துள்ளார்.