BREAKING NEWS

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று பதவியேற்கவுள்ள நிலையில்…

226

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அரசாங்கம் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், புதிய அமைச்சரவையை பிரதமர் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

இன்று பிற்பகல் ரைடோ ஹோலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் கனடாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக பிரான்சுவா-பிலிப் ஷாம்பெயின் (François-Philippe Champagne)  நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த பாராளுமன்றத்தில் உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்களின் அமைச்சராக பணியாற்றிய ஷாம்பெயின், (Champagne) கிறிஸ்டியா ஃப்ரீலாண்டிற்கு (Chrystia Freeland) பதிலாக  வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.

கனடாவின் உயர்மட்ட பதவிக்காக நியமிக்கப்படும் இவர் மிக முக்கியமாக அமெரிக்க மற்றும் சீனாவுடனான இருதரப்பு உறவு விடயங்களை அவதானமாக கையாள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்  அமைச்சரவையில்  கேத்தரின் மெக்கென்னா (Catherine McKenna), கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் (Christiaan Freeland), ஜொனாதன் வில்கின்சன் (Jonathan Wilkinson ) மற்றும் உள்ளிட்ட பல முக்கிய அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெக்கென்னா தனது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற இலாகாவிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார் என்றும்  அதற்கு பதிலாக வில்கின்சன் நியமிக்கப்படுவார் என்று ம் மெக்கென்னா உள்கட்டமைப்பு மற்றும் சமூகங்களின் பங்கை ஏற்றுக்கொள்வார் என்றும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *