முக்கிய செய்திகள்

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக சுட்டுக்கொலை

229

பிரபல பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட தாரக, சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை மீரிகம – ரெண்டபொல பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது அவர் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட போது, பதிலுக்கு காவல்துறையினர்  மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொஸ்கொட தாரக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *