பிரம்டனில் உள்ள அமேசன் நிறுவன கட்டமைப்பு முழுமையாக மூடப்பட்டுள்ள நிலையில் தொழிலாளர் அமைச்சு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஊழியர்கள் சிலர் கண்டறியப்பட்ட நிலையில் அமேசன் நிறுவன கட்டமைப்பு முழுமையாக மூடப்பட்டது.
எனினும், தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட பகுதியை மட்டும் மூடுவதற்கு அனுமதிக்குமாறு நிறுவனம் கோரியிருந்தது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் எவ்வாறான கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன என்பது குறித்து விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றிய விரிவான அறிக்கையொன்று விசாரணைக்குழுவால் தொழில் அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளது.