முக்கிய செய்திகள்

பிரம்டனில் காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

215

பிராம்டனில் வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை 50 பிரதேசத்தில், Countryside Drive பகுதியில் நேற்று பிற்பகல் 4.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய இளைஞன் ஒருவரே கட்டடம் ஒன்றின் கூரையில் இருந்து விழுந்து காயமடைந்தார் என, பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நோயாளர்காவு வானூர்தி மூலம் இவர் மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *