முக்கிய செய்திகள்

பிரம்டன் பகுதியில் வாகனத்தினால் மோதுண்ட பெண் ஒருவர் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு்ளளார்

474

பிரம்டன் பகுதியில் இன்று மாலை வாகனம் ஒன்றினால் மோதுண்டு படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Steeles Avenue மற்றும் Clementine Drive பகுதியில், இன்று மாலை 4.15 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனத்தினால் மோதுண்ட குறித்த அந்தப் பெண் உயிராபத்தான நிலையில் உலங்குவானூர்தி மூலம் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதனை பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தினை அடுத்து அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்துள்ள காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் மற்றும் பாதிக்க்பபட்டவரின் பெயர் வயது உள்ளிட்ட மேலதிக விபரங்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *