முக்கிய செய்திகள்

பிராணா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு

929

வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் `பிராணா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #Praana #NithyaMenon

நித்யா மேனன் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பிராணா. ஒரே ஒரு கதாபாத்திரத்தை சுற்றி நடப்பதுபோல் இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

திரில்லர் கதையைக் கொண்ட இந்த படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் தயாராகிறது. வி.கே.பிரகாஷ் இயக்கும் இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக பணியாற்றுகிறார்.

இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் துல்கர் சல்மான் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

துல்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரின சேர்க்கையாளர், ஒரே ஒரு கதாபாத்திரம் என்று வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நித்யாமேனன். #Praana #NithyaMenon
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *