பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை

41

பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை பரவியிருப்பதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரம் பேருக்கு மேல் புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்திற்கு பின்னர், முதல் முறையாக புதிய கொரோனா பாதிப்பு  கடந்த 7 நாட்களாக 25 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

மூன்றாவது அலை பரவுவதாக பிரான்ஸ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அங்கு நடைமுறைப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *