முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரான்சில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் – பிரதமர் ஜீன் காஸ்டெஸ்

183

பிரான்சில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் ஜீன் காஸ்டெஸ் (Jean Castex) அறிவித்துள்ளார்.

பிரான்சில் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றும்,  இதற்காக அடுத்த ஆண்டில் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக உள்ளதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்படும் என்றும் பிரதமர் ஜீன் காஸ்டெஸ் (Jean Castex) தெரிவித்துள்ளார்.

பல்வேறு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 200 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிப்பதாகவும் பிரான்ஸ் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *