முக்கிய செய்திகள்

பிரான்ஸின் கலாச்சார அமைச்சருக்கும் கொரோனா

28

பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் ரோஸ்லின் பேச்லோட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துதொடர்பாக அவர் தனது கீச்சகப் பக்கத்தில் ‘சுவாச பிரச்சினை காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொண்டேன்.

எதிர்வரும் வாரத்திற்கான எனது நிகழ்ச்சிகளை மாற்றியமைக்க உள்ளேன். இதை தவறாமல் உங்களிடம் தெரிவிப்பேன்’ என பதிவிட்டுள்ளார்.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், இதுவரை 42இலட்சத்து 82ஆயிரத்து 603பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92ஆயிரத்து 305பேர் உயிரிழந்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *