முக்கிய செய்திகள்

பிரான்ஸ் – பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளாக மக்கள் பிடித்துவைப்பு

943

பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் பொதுமக்கள் பலரைபிணைக்கைதிகளாகவைத்துள்ளார். இதில் ஒருவர் இறந்துள்ளதாக நம்பப்படுகிறது.

அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை நோக்கி நபரொருவர் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்கசோன் என்ற பகுதிக்கு அருகிலுள்ள அந்த பல்பொருள் அங்காடிக்கு சிறப்பு போலீஸ் படைகள் விரைந்துள்ளன.

துப்பாக்கியை வைத்துள்ளவர் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் ஃபிரான்சிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஜிகாதிய துப்பாக்கித்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்த சூழ்நிலை “தீவிரமானது” என்று அந்நாட்டின் பிரதமர் எய்துவார் பிலிப் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறினாலும் அதை அரசாங்க அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *