முக்கிய செய்திகள்

பிராம்ப்றன் தமிழ் மூத்தோர் சங்கம் மூன்றாவது ஆண்டு விழா

1381

பிராம்ப்றன் தமிழ் மூத்தோர் சங்கம் மூன்றாவது ஆண்டு விழா பிராம்ப்றன் மாநகரில் தமிழரின் கலாச்சார பண்பாடுகளை பேணிப் பாதுகாப்பதுடன் தனிமையைக் கலைந்து மூத்தோர்களின் அதீத ஆற்றல், தனித்துவம் புரிந்துணர்வு, போன்றவற்றை ஒருவருக்கொருவர், பரஸ்பரம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மூத்தோர் ஐவரினால், 2013ம் ஆண்டு பெருமைக்குரிய பிராம்ப்றன் தமிழ் மூத்தோர் சங்கம் ஆரம்பமானது.

இன்று 300இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களுடன், தமது மூன்றாவது ஆண்டு விழாவினை, கனடா நாட்டுப் பிரதமர் கௌரவ ஜஸ்டின் ட்றூடோ அவர்களின் ஆசியுடன் மிக விமர்சையாக கொண்டாடவுள்ளனர்.

இம்மாதம் 9ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 10.00 மணிவரை, Gore Meadows Community Recreation Centre, 10150 the Gore Road, Brampton, ON, L6P 0A6 இராப்போஷனத்துடன நடைப்பெறவுள்ளது. அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிராம்ப்றன் வாழ் தமிழர்களை ஒன்றிணைக்கும் இவ்விழாவினில் கனடா பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றாறியோ எதிர்கட்சித் தலைவர், ஒன்றாறியோ பாராளுமன்ற உறுப்பினர்கள், பிராம்ப்றன் மாநகர பிதா உட்பட மேலும் பல முக்கியஸ்தர்கள் பங்குக்கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *